வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கைக் கடுமைப்படுத்தும் லண்டன்

 

வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கைக் கடுமைப்படுத்தும் லண்டன்

கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவதுமே பேரச்சத்தை விளைவித்து வருகிறது. பெரும் வல்லரசு நாடுகளாலே இதைக் கட்டுப்படுத்தவோ, பரவலை முழுமையாகத் தடுக்கவோ முடியவில்லை என்பதுதான் சோகம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 31 லட்சத்து 90 ஆயிரத்து 663 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 13 லட்சத்து 24 ஆயிரத்து 906 நபர்கள்.

வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கைக் கடுமைப்படுத்தும் லண்டன்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 27 ஆயிரத்து 904 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,02,37,853 பேர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. முதல் அலையை விட அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இங்கிலாந்தில் இதுவரை மொத்த பாதிப்பு 18,69,666. இவர்களில் 64,402 பேர் இறந்துவிட்டனர். இதனால், இங்கிலாந்து அரசு ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை இங்கிலாந்தில் மக்களுக்குச் செலுத்த முடிவெடுத்தது. மக்களுக்குச் செலுத்தப்பட்டும் வருகிறது.

வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கைக் கடுமைப்படுத்தும் லண்டன்

இந்நிலையில் கொரோனா வைரஸ் புதிய மாற்றம் அடைந்து வேகமாகப் பரவி வருகிறது எனக் கண்டறிந்துள்ளனர். அதனால், அதற்கேற்ப சிகிச்சையில் பல மாற்றங்களைச் செய்துவருகிறார்களாம்.

கொரோனா வேகமாகப் பரவுவதால், லண்டனில் 3 அடுக்கு ஊரடங்கைக் கடுமையாக நடைமுறைப் படுத்த இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.