அழகான பெண்களோடு ஜாலியாக இருக்கலாம் என்று ஒரு டேட்டிங் கிளப்பிலிருந்து வந்த போனை நம்பி போனவரிடம் 15 லட்ச ரூபாய் பணத்தை பறித்துக்கொண்ட கிளப் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜெயந்திபாய் என்ற 40 வயது ஆடை வடிவமைப்பாளர், வைல் பார்லேவில் ஒரு கடை வைத்திருக்கிறார். அவர் மும்பையில் உள்ள தஹிசரில் வசிக்கிறார்.இவருக்கு கடந்த மாதம் ஒரு டேட்டிங் கிளப்பிளிருந்து சோனாலி என்ற பெண் பேசினார். அப்போது அவர் தாங்கள் இந்த டேட்டிங் கிளப்பில் பணம் கட்டி உறுப்பினராக சேர்ந்தால், இங்கிருக்கும் லட்டு மாதிரி இருக்கும் அழகான பெண்களோடு ஜாலியாக இருக்கலாம் என்று அவருக்கு ஆசை காமித்தார். மேலும் இங்கு உறுப்பினராக மாறினால் மாதம் 25,000ரூபாய் சம்பாதிக்கலாம் என்றும் அவருக்கு ஆசை கட்டியுள்ளார். இதனால் கவரப்பட்ட அவர் முதலில் ஒரு லட்ச ருபாய் கட்டி உறுப்பினராக சேர்ந்தார்.பிறகு அவர்கள் அவரின் ஆசையை தூண்டி படிப்படியாக 15 லட்ச ரூபாய் அளவிற்கு பறித்துள்ளார்கள் .
ஆனால் அங்கு அவர்கள் கூறியபடி எந்த பெண்ணையும் அவரின் கண்ணில் காட்டாமல் ஏமாற்றியுள்ளனர்.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த க்ளப் மீது புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த கிளப்பிலிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தி ,அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
