பாசிச திமுக – மதசார்பற்ற அரசுக்கு ஆலயங்களில் என்ன வேலை? அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! -வெடிக்கும் பாஜக நிர்வாகிகள்

பாசிச திமுக – மதசார்பற்ற அரசுக்கு ஆலயங்களில் என்ன வேலை?  அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! -வெடிக்கும் பாஜக நிர்வாகிகள்

நீதிமன்ற உத்தரவையும் மீறி முறைகேடான வகையில் சென்னை ,திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இந்து கோவிலிலிருந்து அர்ச்சகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டுள்ளனர். இதை இவ்வளவு அவசர அவசரமாக செய்வது ஏன் ? என்று கேள்வி எழுப்பும் பாஜக அஸ்வத்தாமன், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் நினைவிருக்கட்டும் என்று எச்சரிக்கிறார்.

பாசிச திமுக – மதசார்பற்ற அரசுக்கு ஆலயங்களில் என்ன வேலை?  அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! -வெடிக்கும் பாஜக நிர்வாகிகள்

இந்த விவகாரத்தில் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், புதிய அர்ச்சகர்களுக்கு பணி வழங்குகிறேன் என்று ஏற்கனேவே இருக்கும் அர்ச்சகர்களை எந்த காரணமும் இன்றி நீக்குவது கண்டிக்கத்தக்கது . சில ஆலயத்தின் அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக இறைசேவையில் ஈடுபடுகிறார்கள் . உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் இத்தகைய பரம்பரை அர்ச்சகர்களின் உரிமையை அங்கீகரித்துள்ளது. பல கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள் அரசு பணியாளர்கள் அல்ல. அரசும் அவர்களுக்கு மாத சம்பளமும் கொடுப்பதில்லை என்கிறார்.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை, பல நிர்வாக சீர்கேடுகள். ஹிந்துக்கோவில்கள், பாரம்பரியத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. மதசார்பற்ற அரசுக்கு ஆலயங்களில் என்ன வேலை? அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! என்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.

பாசிச திமுக – மதசார்பற்ற அரசுக்கு ஆலயங்களில் என்ன வேலை?  அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு! -வெடிக்கும் பாஜக நிர்வாகிகள்

2015ல் வழங்கப்பட்ட உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக அர்ச்சகர்களை நியமனம் செய்த தமிழக அரசு. பாசிச திமுக! என்கிறார் சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் முருகன். இந்த டுவிட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் தமிழக பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உச்சமன்ற தீர்பிற்கு விரோதமாகவும் செயல்படும் தமிழக அரசு ஏற்கனவே பணியிலுள்ள ஏழை அர்ச்சகர்களை வலுக்கட்டாயமாக வன்முறையாக தூக்கி எறியும் இந்த சட்டவிரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். சட்ட நடவடிக்கை மூலம் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.