காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்…. பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்…. பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஜம்மு அண்டு காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பரூக் அப்துல்லா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா நேற்று மக்களவையில் பேசுகையில் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அமைதியை கொண்டு வருவதற்காக ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும்.

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்…. பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
பரூக் அப்துல்லா

மத்திய காஷ்மீரில் இன்றும் என்கவுண்டர் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு அமைதி இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நாம் எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெறும்போதுதான் அமைதி வரும். அது இல்லாமல் அமைதி இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்…. பரூக் அப்துல்லா வலியுறுத்தல்
காஷ்மீர்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2019 ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த சட்டபிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரசேதங்களாக பிரித்தது.