காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியர்களாக உணரவில்லை… பரூக் அப்துல்லா

 

காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியர்களாக உணரவில்லை… பரூக் அப்துல்லா

காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியர்களாக உணரவில்லை என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நேர்மையாக சொல்கிறேன், காஷ்மீரில் தன்னை இந்தியர் என்று சொல்லும் நபர்களை அவர்கள் (அரசாங்கம்) கண்டுபிடித்தால் நான் ஆச்சரியப்படுவேன். நீங்கள் போய் யாரிடமும் கேளுங்க, அவர்கள் இந்தியர்களாக அறிய விரும்பவில்லை. அதேசமயம் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் தெளிவாக சொல்கிறேன்.

காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியர்களாக உணரவில்லை… பரூக் அப்துல்லா
பருக் அப்துல்லா

ஆனால் அவர்கள் இந்தியர்களாக உணரவில்லை. அவர்கள் எப்படி வாழ போகிறார்கள் என நான் ஆச்சரியப்படுகிறேன். இதுதான் காஷ்மீர் மக்களின் மனநிலை ஏனென்றால் காஷ்மீரில் அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாடு பிரிவினையின்போது காஷ்மீர் மக்கள் எளிதாக பாகிஸ்தானுடன் சென்று இருக்கலாம். ஆனால் அவர்கள் காந்தியின் இந்தியாவில் இணைந்தனர் ஆனால் மோடியின் இந்தியாவில் இல்லை.

காஷ்மீர் மக்கள் தங்களை இந்தியர்களாக உணரவில்லை… பரூக் அப்துல்லா
காஷ்மீர் பெண்கள்

இன்று சீனா ஒருபுறம் முன்னேறி வருகிறது. நீங்கள் அவர்களிடம் பேசினால் (காஷ்மீர் மக்கள்) சீனர்கள் உள்ளே வருவதை விரும்புகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். பள்ளத்தாக்கில் இந்தியா குறித்து பேசினால் கேட்க யாரும் இல்லை. ஒவ்வொரு வீதிகளிலும் ஏ.கே.47 கையில் வைத்துக்கொண்டு பாதுகாப்பு வீரர்கள் நிற்கின்றனர். சுதந்திரம் எங்கு உள்ளது? இவ்வாறு அவர் தெரிவித்தார்.