இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்… பரூக் அப்துல்லா

 

இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்… பரூக் அப்துல்லா

இந்தியாவும், பாகிஸ்தானும் அனைவரின் சிறந்த நலனுக்காக தங்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பரூக் அப்துல்லா வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் மற்றும் 3 இதர கட்சிகளும் இணைந்து, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்கு எதிராக போராடுவாம் என கடந்த 22ம் தேதியன்று அறிவித்தன. இது குப்கர் பிரகடனம்-2 என அழைக்கப்படுகிறது. குப்கர் பிரகடனத்தை பாகிஸ்தான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தானை விமர்சனம் செய்து இருந்தார். அந்த பேட்டியில் பரூக் அப்துல்லா கூறியதாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்… பரூக் அப்துல்லா
பரூக் அப்துல்லா

நாங்கள் யாருடைய கைப்பாவையும் அல்ல, டெல்லி அல்லது எல்லையை தாண்டிய எவரும் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். நாங்கள் ஜம்மு அண்டு காஷ்மீர் மக்களுக்கு பதில் அளிக்கிறோம், அவர்களுக்காக பணியாற்றுவோம். ஆயுதங்கள் தாங்கியவர்களை காஷ்மீருக்குள் அனுப்புவதை நிறுத்தும்படி பாகிஸ்தானை வலியுறுத்துகிறேன். எங்கள் மாநிலத்தில் நடந்த இரத்தகளரிக்கு முற்றுப்புள்ளிக்கு வைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்… பரூக் அப்துல்லா
சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

கடந்த அண்டு ஆகஸ்ட் 5ம் தேதியன்று அரசியலமைப்பற்ற முறையில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டவை உள்பட எங்கள் உரிமைகளுக்காக ஜம்மு அண்டு காஷ்மீரில் உள்ள அனைத்து கட்சிகளும் அமைதியாக போராட உறுதி பூண்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அனைவரின் சிறந்த நலனுக்காக தங்கள் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் யுத்த மீறல்கள் நிகழும்போது எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறமும் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள். கடவுளின் பொருட்டு அதை நிறுத்துங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.