முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் மையம் மூடல்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் மையம் மூடல்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டதை எதிர்த்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை முடியும் நிலையில் இருக்கிறது. அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். ஆனால் தஞ்சையில் தற்போது முன் அறிவிப்பின்றி கொள்முதல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதோடு, நெல்மணிகள் மழையில் நினைந்து சேதமடையும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர்.

முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் மையம் மூடல்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

இந்த நிலையில், உடனடியாக நெல் கொள்முதல் மையங்களை திறக்கக் கோரி தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்க முடியாமல் தவித்து வருவதாகவும் மழையில் நெல்மணிகள் நனைந்து சேதமடையும் நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் மையம் மூடல்; விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

மேலும், போர்க்கால அடிப்படையில் நெல்லை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் நிலையங்களை திறக்கவில்லை என்றால் கடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.