விவசாயிகள் டெல்லி போராட்டம் : புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு!

 

விவசாயிகள் டெல்லி போராட்டம் : புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு!

விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது.

விவசாயிகள் டெல்லி போராட்டம் : புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு!

அந்தவகையில் விவசாயிகள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் . இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் ,தேசியவாத காங்கிரஸ் ,ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முழு அடைப்பில் பங்கேற்க போவதில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் டெல்லி போராட்டம் : புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு!

அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் ,மதிமுக ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன . அதேபோல் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் , தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆகியவையும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளது.

விவசாயிகள் டெல்லி போராட்டம் : புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு!

இந்நிலையில் விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆட்டோக்கள் ஓடவில்லை. புதுச்சேரியில் டீ கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.