ஒருபோகமும் இழக்கும் அபாயம்! சாரபங்கா திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

 

ஒருபோகமும் இழக்கும் அபாயம்! சாரபங்கா திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மேட்டூர் அணையில் உள்ள நீரை எடுத்து சாரபங்கா திட்டம் மற்றும் நீரேற்றும் கால்வாய் திட்டங்களை கைவிட கோரி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக அம்மாபேட்டை பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.பி. சோமு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கர்நாடகம் கொடுக்கும் உபரி நீர்தான் டெல்டா பாசனத்திற்கு அடிப்படையாக இருந்து வருகிறது. 22 மாவட்டங்கள் குடி நீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உபரி நீர் கடலில் போய் விழுகிறது என மேட்டூர் அணையில் உள்ள நீரை எடுத்து சாரபங்கா திட்டம் மற்றும் நீரேற்றும் கால்வாய் திட்டம் என தொடர்ந்து திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவதால் டெல்டா மாவட்டத்தில் முப்போகம் இழந்து இருபோகம் மறந்து வரும் நிலையில் ஊசலாடும் ஒருபோகமும் இழக்கும் நிலை உள்ளது.

ஒருபோகமும் இழக்கும் அபாயம்! சாரபங்கா திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நிலத்தடி நீர் வற்றி கடல் நீர்புகும் டெல்டாவின் நீர் இருப்பு நிலைகளை, படுக்கை அணைகளை கட்டி உபரி நீரை சேமிக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ‌ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர். ஆர்.செந்தில் குமார், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் R.S.பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் S.M.குரு மூர்த்தி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் K.ராஜாராமன், G.பழனிச்சாமி S.உத்திராபதி, M.ராஜமாணிக்கம், T.ராமலிங்கம், கிளை நிர்வாகிகள் S.அய்யாசாமி , C.மணிகண்டன், K.சுதாகர், T.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.