‘மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்’ : டெல்லியில் பரபரப்பு!

‘மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்’ : டெல்லியில் பரபரப்பு!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்கள் 3ஆவது நாளாக தொடருகிறது.

‘மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்’ : டெல்லியில் பரபரப்பு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழக்கிழமை பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றனர். அரசு உத்தரவின் பேரில் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போலீசார் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகள் பேரணியை தடுக்க முயன்றனர். கடுப்பான விவசாயிகள் போலீசார் மீது கற்களை வீசி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

‘மூன்றாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்’ : டெல்லியில் பரபரப்பு!

அம்பாலாவில் இந்த போராட்டம் நடந்த நிலையில், டெல்லிக்குள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், விடாப்பிடியாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்ததால் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் காவல்துறை டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதித்தது. இந்த நிலையில், தொடர்ந்து 3ஆவது நாளாக புராரியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்ட மத்திய வேளாண்துறை அமைச்சர் வரும் 3ம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.