சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து, விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனையொட்டி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் தென்னங்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், மழையில் நனைந்து நெல் சேதமடைந்து வருவதாகவும், கொள்முதல் செய்த நெல்லை கிடங்கிற்கு அனுப்பாமல் தேக்கி வைப்பதால் புதியதாக நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்

இந்நிலையில் விவசாயிகள் தங்களது நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி தென்னங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு தஞ்சாவூர் -பூதலூர் சாலையில் நெல்லை கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம்