ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள்  போராட்டம்

பாரத் பெட்ரோலியத்தின் இருகூர்-தேவனகொந்தி எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரம் பெற்ற அலுவலரால் 3,4,6/11/2020 ஆகிய மூன்று நாட்கள் நில எடுப்பிற்கான விசாரணை அழைப்பாணை படியூர்,சிவன்மலை, மரவபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள்  போராட்டம்

இது குறித்து ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு விவாதித்து கீழ் கண்ட முடிவினை எடுத்துள்ளது.
அதன் விபரம் பின் வருமாறு:
ஐடிபிஎல் திட்டத்தை கெயில் திட்டத்திற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா வகுத்த கொள்கைப்படி சாலையோரமாக அமைக்கக் கோரி IDPL திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு செப்டம்பர்-15/2020 முதல் பாதிக்கப்படும் ஆறு மாவட்டங்களிலும் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. ஆறு மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி அரசிடமிருந்து “இறுதி முடிவு வரும் வரை ஐடிபிஎல் திட்ட வேலைகள் எதுவும் நடைபெறாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள்  போராட்டம்

திருப்பூர் கோட்டாட்சியர், திருப்பூர் மாவட்ட. விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரம் பெற்ற அதிகாரி புஷ்பாவும், ஐடிபிஎல் திட்ட மேலாளர் உமாராணியும் 27/10/2020 அன்று விசாரணை நடத்த வந்திருந்தனர்.
கூட்டமைப்பின் முடிவுப்படி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் அணிதிரண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க இருந்த விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விசாரணையை ரத்து செய்யவும் வலியுறுத்தினர்.
அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஈரோடு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக விசாரணையை ரத்து செய்யக்கோரி மிக உறுதியாகப் போராடினார்கள்.
தவிர்க்க முடியாமல் அதிகாரம்பெற்ற அதிகாரி புஷ்பா அவர்கள் மொடக்குறிச்சி விசாரணையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
இதே அதிகாரி புஷ்பா தான் காங்கயத்தில் விசாரணைக்கு அழைப்பாணை கொடுத்துள்ளார்.

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள்  போராட்டம்

மொடக்குறிச்சியில் அணிதிரண்டதைப் போல 03/11/2020 செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குடும்பத்துடன் காங்கயத்தில் அணிதிரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக,காங்கிரஸ்,சிபிஐ,சிபிஎம் ,கொமதேக,விசிக,புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள்  போராட்டம்