“திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம்”- மு.க ஸ்டாலின் அறிக்கை!

 

“திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம்”- மு.க ஸ்டாலின் அறிக்கை!

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என அக்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘ அதிமுக அரசு ஆதரித்து, மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த சுதந்திரத்தின் விளைவால் பருப்பு, சமையல் எண்ணெய், உருளைக் கிழங்கு என அனைத்தும் விலையேறி விட்டன.

“திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம்”- மு.க ஸ்டாலின் அறிக்கை!

குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிறை தண்டனை என்று பஞ்சாப் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. திமுக உள்ளிட்ட அமைப்புகள் சட்டங்களை எதிர்த்து வழக்கு போட்டிருக்கின்றன. கேரள அரசு காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளது. ஆனால் அதிமுக அரசு என்ன செய்துள்ளது?.

“திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சட்டம்”- மு.க ஸ்டாலின் அறிக்கை!

விவசாயிகளின் பாதுகாப்பு சட்டங்களையும் கொண்டு வரவில்லை. கமிஷன், டெண்டர் தவிர எதைப்பற்றியும் அக்கறையும் இல்லை. தீபாவளி பண்டிகை நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மத்திய பாஜக அரசு தடுக்க வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி விலை ஏற்றத்தில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வரவேண்டும்.

அதிமுக கொண்டு வரவில்லை என்றால் திமுக ஆட்சி காய்கறிகளுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கும் விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் அவர்களின் துயர் தீர்ப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்வோம். இது உறுதி” என குறிப்பிட்டுள்ளார்.