டெல்லி சாலைகளில் கீரை பயிரிட முடிவு… போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விவசாயிகள்!

 

டெல்லி சாலைகளில் கீரை பயிரிட முடிவு… போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விவசாயிகள்!

டெல்லி விவசாயிகள் போராட்டம் 20 நாட்களுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தற்போது சாலை ஓரங்களிலேயே கீரைகளை பயிரிடத் தொடங்கி உள்ளார்களாம். டெல்லிக்குள் நுழையும் புறநகர் பகுதியான, சிங்கு பார்டரில் விவசாயிகள் முகாமிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளால் முற்றுகையிடப்பட்ட டெல்லியில், சுமார் 3 லட்சம் விவசாயிகள் குழுமி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டெல்லி சாலைகளில் கீரை பயிரிட முடிவு… போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விவசாயிகள்!

போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகப் பெரிய சவாலானது. ஆனால், அதை அவர்களே முன்னின்று ஏற்படுத்துக் கொள்வதை உலக பத்திரிகையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். தினசரி மூன்று லட்சம் பேருக்கு உணவு சமைப்பது என்பது மிகப்பெரிய வேலை. அந்த சூழலை எப்படி சமாளிக்கிறார்கள் என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சிலர் நேரில் பார்வையிட்டு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

விவசாயிகள் அனைவரும் சாலையோரங்களில் தமது குடும்பங்களுடன் கூடாரங்களில் தங்கி உள்ளனர். இப்படி பல குடும்பங்களின் பொருட்களை சேர்த்து உணவு சமைப்பதற்கு திட்டமிடுகின்றனர்.சில இடங்களில் ஒவ்வொரு பகுதியிலும் குழுவாக இணைந்து உணவுகளை சமைக்கின்றனர். போராட்ட களத்தில் உள்ள ஒருவரும் உணவில்லாமல் பட்டினி கிடக்கக் கூடாது என்பதில் போராட்ட குழு கவனமாக உள்ளதாக குறிப்பிடுகின்றனர். அனைவருக்கும் உணவு இலவசமாக வழங்கப்படுகின்றன.

டெல்லி சாலைகளில் கீரை பயிரிட முடிவு… போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விவசாயிகள்!

உணவு தயாரிப்பதற்கான பொருட்கள், பஞ்சாப், ஹரியானா குருத்வாராக்கள் மூலமும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வசதி உள்ள விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்தி பொருட்களை நேரடியாக போராட்டக் களத்துக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள், இலைகள், தட்டு என எல்லாம் வருகின்றன. சப்பாத்தி, ரொட்டி அதற்கு தொட்டுக்கொள்ள பருப்பு. இதுதான் பிரதான உணவு. சில இடங்களில் மாலை நேர ஸ்நாக்ஸ் செய்யப்படுகின்றன. இவையும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகின்றன. சில இளைஞர்கள் பீட்சா, பர்க்கர், பாவ் பாஜி உள்ளிட்ட உணவுகளையும் அங்கேயே தயாரித்து அளிக்கின்றனர்.

டெல்லி சாலைகளில் கீரை பயிரிட முடிவு… போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விவசாயிகள்!

வாய்ப்புள்ள இடங்களில் உணவுகள், சாலையோரங்களில் அமர்ந்து சாப்பிடும் வகையில் நடக்கின்றன. குருத்வாராக்களில் உள்ளதுபோல, தட்டுகள் கொடுத்து உணவுகளை பரிமாறுகின்றனர். இந்த நடைமுறை சீக்கியர்களின் பாரம்பரிய உணவு பரிமாறும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலான இடங்களில் சமைப்பது எல்லோருமே ஆண்கள்தான்! உணவுபோல, தேநீர், தண்ணீர் போன்றவையும் விநியோகம் செய்யப்படுகின்றன.

அதிகாலை 4 மணிக்கு டீ காபி தயாரிக்கத் தொடங்கும்போதே தங்களது போராட்டங்களையும் தொடங்கிவிடுகின்றனர். இதற்கான பால் பொருட்கள் நேரடியாக பஞ்சாப், ஹரியாணாவில் இருந்து விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

டெல்லி சாலைகளில் கீரை பயிரிட முடிவு… போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விவசாயிகள்!

சமைக்கும் இடத்திலேயே உணவுகள் பரிமாறப்படுகின்றன. டெல்லி மக்களும் போராடும் விவசாயிகளுக்கு உணவுப் பொருட்களை அளித்து வருகின்றனர். மாலை இரவு நேரங்களில் குப்பைகளை சேகரித்து இடத்தை சுத்தம் செய்கின்றனர். போராட்டம் 20 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போது சாலை நடுவிலும், சாலை ஓரங்களிலும் கீரைகளை பயிரிடத் தொடங்கி உள்ளனர். கொத்தமல்லி, கீரை போன்றவை விதைக்கிறார்களாம்.

மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 20 நாட்களாக நடைக்கும் விவசாய போராட்டத்தின் சூடு இன்னமும் குறையாமல் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அந்த சூடு விவசாயிகள் அதிகாலையில் அருந்தும் தேநீரில் இருந்தே பற்றிக் கொள்கிறது என்கிறார்கள் சர்வதேச பத்திரிகையாளர்கள்.