டெல்லியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு

 

டெல்லியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு

தமிழக போலீசாருக்கு தெரியாமல், டெல்லி சென்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை, விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கவிடாமல் அம்மாநில போலீசார் தடுப்புக்காவலில் வைத்தனர். திருச்சியை சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, டெல்லி போராட்டத்துக்கு செல்ல பல்வேறு முறை முயற்சி செய்தும் போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும், அவர் வெளியே செல்லாத வகையில், அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

டெல்லியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், எலிக்கறி உண்ணும் போராட்டம் என அவர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை டெல்லி செல்ல அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்வதாக போலீசாரிடம் கூறிவிட்டு மதுரை சென்றார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து, மதுரை விமான நிலையம் சென்ற அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கரோல்பாக் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அய்யாகண்ணு இன்று காலை போராட்ட பகுதிக்கு புறப்பட முயன்றார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார் போராட்டத்திற்கு செல்ல விடாமல், தடுப்புக்காவலில வைத்தனர்.