இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

 

இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

ஒரு மனிதன் 50 வயதைக் கடந்துவிட்டாலே இளமையில் உழைத்தது போல் உழைக்க முடிவதில்லை. கட்டாய ஓய்வு தேவைப்படுகிறது. வீட்டில் வெறுமனே உட்கார்ந்தால் போதுமா? சோறு தட்டுக்கு வந்துவிடுமா? இன்னபிற செலவுகளுக்கு யாரிடம் கையேந்துவது? இந்த இடத்தில் தான் ஓய்வுபெற்ற பின் மாதமாதம் கிடைக்கும் ஓய்வூதியம் முக்கியப் பங்குவகிக்கிறது.

இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

சரி நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறதா? இல்லை, ஏனென்றால் இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்களே அதிகம். அதிலும் குறிப்பாக விவசாயிகள் தான் பெரும்பான்மை. மற்ற தொழில்களை விடுங்கள்… விவசாயிகள் அன்றாடம் உழைத்தால் தான் சோறு. அப்படியிருக்கையில் ஓய்வூதியத்திற்கு எங்கே போவது? எப்படி உட்கார்ந்து சாப்பிடுவது?

இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. பிரதமரின் கிஷான் மன்தன் சிறப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் பிரிமீயம் கட்டினால், 60 வயதுக்கு மேல் மாதம் 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஏறத்தாழ 21 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஓய்வூதிய நிதிகளைப் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிர்வகிக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

இத்திட்டத்தில் விவசாயிகள் மற்றும் அரசின் பங்கு என்ன?

அதிகபட்சமாக 5 ஏக்கர் (2 ஹெக்டேர்) நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளும் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் இணைக்கப்படுவார்கள். வயதைப் பொறுத்து விவசாயிகள் கட்டும் மாதத் தொகையில் மாற்றம் இருக்கும். உதாரணமாக, 18 வயதில் ஒரு விவசாயி இத்திட்டத்தில் சேர்கிறார் என்றால் அவர் மாதம் 55 ரூபாய் கட்டினால் போதுமானது. அதே மற்றொரு விவசாயி 40 வயதில் இணைந்தால் அவர் மாதம் 200 ரூபாய் கட்ட வேண்டும். இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக 20 ஆண்டுகளில் வரையும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரையும் கட்டாயம் பிரிமீயம் கட்ட வேண்டும். சரி இதில் அரசாங்கத்தின் பங்கு என்ன? விவசாயி கட்டும் தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசும் எல்ஐசியில் செலுத்தும். இது இரண்டும் இணைந்து தான் மாதம் 3 ஆயிரம் ரூபாயாக ஓய்வூதியம் கிடைக்கும்.

இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

இத்திட்டத்தில் எப்படி இணைய வேண்டும்?

விவசாயிகள் தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் அரசு அனுமதி பெற்ற சிஎஸ்சி (CSC)மையங்களில் பதிவுசெய்துகொள்ளலாம். தேவைப்படும் ஆவணங்கள்: விவசாயியின் ஆதார் கார்டு, நிலம் சம்பந்தம்பட்ட ஆவணங்கள், 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகம். இந்த ஆவணங்களைச் சமர்பித்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட ஓய்வூதிய எண்ணும், ஓய்வூதிய அட்டையும் வழங்கப்படும். குறிப்பாக, விவசாயிகள் தங்களது விவரங்களைப் பதியும்போது மையங்களில் பதிவுக் கட்டணம் கேட்டால் எக்காரணம் கொண்டும் கொடுக்காதீர்கள்.

இனி விவசாயிகளுக்கும் மாதமாதம் ஓய்வூதியம்… மத்திய அரசின் மெகா திட்டம் – முழு விவரம் உள்ளே!

இத்திட்டத்திலிருந்து பாதியிலிருந்து விலகினால் என்ன விளைவு ஏற்படும்?

தவிர்க்க முடியாத சில காரணங்களால் விவசாயிகளால் பிரிமீயம் கட்ட முடியாமல் இத்திட்டத்திலிருந்து விலகினாலும் அவர்களின் பணம் எங்கும் போய் விடாது. அதற்கு முழு உத்தரவாதம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயி திட்டத்திலிருந்து விலக நேர்ந்தால், அவர் கட்டியிருக்கும் தொகை அவரின் வங்கி கணக்குக்கு மாற்றப்படும். அதற்குண்டான வட்டித்தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை திடீரென்று விவசாயி இறந்துவிட்டால், அவரது மனைவி எஞ்சியிருக்கும் பிரீமியத்தைக் கட்டலாம். அவர் தொடர விரும்பவில்லை என்றாலும் கணவர் கட்டிய தொகை வட்டியுடன் சேர்த்து அவருக்கு அளிக்கப்படும். மனைவி இல்லையென்றால் விவசாயி நாமினியாகப் பரிந்துரைத்த நபருக்கு வழங்கப்படும்.