சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க.. விவசாயிகள் கோரிக்கை

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க.. விவசாயிகள் கோரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிரமாக போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்தவித உடன்பாடுகளும் ஏற்படவில்லை. இதனையடுத்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க.. விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகள் போராட்டம்

கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் தர்ஷன் பால் இது தொடர்பாக கூறியதாவது: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். நாங்கள் பாரதிய கிசான் யூனியனை சேர்ந்த டிக்கைட் ஜி உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர் எங்களுடன் இருப்பதாக கூறினார். இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்க.. விவசாயிகள் கோரிக்கை
உருவ பொம்மை எரிப்பு (கோப்புபடம்)

டிசம்பர் 5ம் தேதியன்று, மோடி அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய நாடு முழுவதும் உருவ பொம்மைகளை எரிக்க நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேறாதவரை நாங்கள் இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.