darbar
  • January
    20
    Monday

Main Area

Main



விளைநிலங்களைத் தீயில் இருந்து காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்த விவசாயி : வைரல் வீடியோ !

fire
fire

வெளிநாடுகளில் பல தீவிபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ மளமளவெனப் பரவிப் பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியது. அந்த காட்டுத் தீ விபத்தில் சுமார் 2000 கோலா கரடிகள் உயிரிழந்து விட்டதாகவும், அதன் வாழ்விடங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன. இவ்வாறு, திடீரென ஏற்படும் கோர தீ விபத்தினால் பல உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எதிர்பாராமல் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து இருந்து ஒருவர் அவரது விளைநிலங்களைக் காப்பாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ttn

அந்த வீடியோவில், மிகப்பெரிய விளைநிலத்தில் பயிர்கள் அறுவடைக்காகக் காத்திருக்கும் நிலையில் திடீரேன மளமளவெனப் பற்றிய தீ அந்த விளைநிலம் முழுவதுமாக வேகமாகப் பரவிக் கொண்டே வருகிறது. அந்த தீயிலிருந்து பயிர்களைக் காப்பாற்றுவதற்காகத்  தனது இயந்திரத்தின் மூலம் விளைநிலத்தின் இடையே தடுப்பு ஒன்றை ஏற்படுத்துகிறார். அதாவது, அந்த தீ எஞ்சியுள்ள நிலங்களையும் நாசமாக்காமல் நிறுத்துவதற்காகத் தீப்பற்றி வரும் பயிர்களுக்கும் எஞ்சியுள்ள பயிர்களுக்கும் இடையே உள்ள பயிர்களை இயந்திரத்தைக் கொண்டு அகற்றுகிறார். அதன் மூலம், தீ எஞ்சியுள்ள விளைநிலங்களில் பரவாமல் தடுக்க முடியும். அந்த பயங்கர தீயில் கூட உயிரைப் பணயம் வைத்து அந்த நிலங்களைக் காப்பாற்றுகிறார். அந்த வீடியோ காண்போர் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. 

 

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வரும் அந்த வீடியோவிற்கு " அவர் ஒரு உண்மையான ஹீரோ, உண்மையான விவசாயி, விவசாயிகள் துணிச்சலானவர்கள் அதுவே உண்மையான வீரம்" என்று பலரும் அந்த வீடியோவிற்கு கமெண்ட் மற்றும் லைக்ஸை தெறிக்கவிட்டு வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.