சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்!

 

சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் காலமானார். கடந்த 1980 மற்றும் 1984 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவரது மரணம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிவகாசி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.பாலகிருஷ்ணன் காலமானார்!

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு நிலையில் அதிமுக பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.