காஞ்சிபுரம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி; தொடரும் மரணங்கள்!

 

காஞ்சிபுரம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி; தொடரும் மரணங்கள்!

உத்திரமேரூரில் மின்வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் பொருட்டு அமைக்கப்படும் மின்வேலிகளில், விலங்குகளோடு மனிதர்களும் உயிரிழப்பதால் அதற்கு அரசு தடை விதித்தது. இருப்பினும் சட்டவிரோதமாக பல இடங்களில் மின்வெளி அமைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வந்த பெரியசாமி மற்றும் மலர்க்கொடி ஆகிய தம்பதி, தங்கள் நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி; தொடரும் மரணங்கள்!

அதனைத்தொடர்ந்து சேலம் அருகே விஜயகுமார் என்பவரும் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். இந்த நிலையில், காஞ்சிபுரம் அருகே மேலும் ஒருவர் மின்வேலியால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே எல்.எண்டத்தூர் கிராமத்தில் வசித்து வந்த கோபி என்னும் விவசாயி, வழக்கம் போல வயலுக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், யாருடைய வயலில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.