டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு : போலீஸ் தாக்குதலா?

 

டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு : போலீஸ் தாக்குதலா?

டெல்லி போராட்டத்தில் பங்கேற்று காயமடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் வலுத்துள்ளது. திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாக, விவசாயிகள் பேரணியை தொடங்கியதால் போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதே இதற்கு காரணம். போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த விவசாயிகள், டெல்லியின் பல இடங்களில் டிராக்டர்களை தாறுமாறாக ஓட்டி போலீசாரை அச்சமடைய செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கண்ணீர் புகை குண்டுகள் வீசும் போலீசார் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு : போலீஸ் தாக்குதலா?

இதனிடையே, டெல்லியின் 5 எல்லைகளில் இருந்து போலீசார் தடையை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் கம்பத்தில், விவசாய சங்கங்களின் கொடிகளை மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என டெல்லி போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் கலவரம் தொடருகிறது.

டெல்லி போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு : போலீஸ் தாக்குதலா?

விவசாயிகள் போராட்டத்தில் டெல்லியே போர்க்களமாகி இருக்கும் இந்த சூழலில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயி உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் அந்த விவசாயி சரிந்து கிடக்கும் அந்த புகைப்படம் மனதை உலுக்குகிறது. உயிரிழந்த அந்த விவசாயி மீது தேசியக்கொடி போர்த்திய சக விவசாயிகள், அவருக்கு போராட்டக் களத்திலேயே அஞ்சலி செலுத்துகின்றனர்.

உயிரிழந்த விவசாயியின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்த விவசாயிகள், போலீசார் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அவர் டிராக்டரை ஓட்டிச் சென்ற போது அவர் மீது புல்லட் ஒன்று பாய்ந்ததாகவும், அதில் அவர் காயமடைந்ததால் டிராக்டர் விபத்துக்குள்ளாகியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.