இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாரத் பந்த்… தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் கிடையாது

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாரத் பந்த்… தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் கிடையாது

இன்று காலை 6 மணி மதல் மாலை 6 மணி வரை நடைபெறும் பாரத் பந்தில் பங்கேற்கும்படி விவசாயிகள் தலைவர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 27ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயார் ஆனால் சட்டங்களை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாரத் பந்த்… தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் கிடையாது
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

இந்த சூழ்நிலையில், டெல்லியின் எல்கைளில் விவசாயிகளின் போராட்டம் 4 மாதம் நிறைவடைவதை குறிக்கும் வகையிலும், வேளாண் சட்டங்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மார்ச் 26ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தன. பாரத் பந்த் அன்று கடைகளை அடைக்கும்படி வர்த்தகர்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து முடக்கப்படும் என விவசாயிகள் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாரத் பந்த்… தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மட்டும் கிடையாது
பாரத் பந்த்

பாரத் பந்த் தொடர்பாக 40 வேளாண் சங்கங்கிளின் தலைமை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு தழுவிய அளவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பாரத் பந்த் கடைப்பிடிக்கப்படும். இருப்பினும், தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பாரத் பந்த் நடைபெறாது என தெரிவித்துள்ளது.