”வேளாண் சீர்திருத்தங்களால் தொழில்முனைவோர்களாக மாறும் விவசாயிகள்”- பிரதமர் மோடி பெருமிதம் !

”வேளாண் சீர்திருத்தங்களால் தொழில்முனைவோர்களாக மாறும் விவசாயிகள்”- பிரதமர் மோடி பெருமிதம் !

மத்திய அரசு மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்த்திருத்தங்களால், விவசாயிகள் தொழில்முனைவோர்களாக மாறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

”வேளாண் சீர்திருத்தங்களால் தொழில்முனைவோர்களாக மாறும் விவசாயிகள்”- பிரதமர் மோடி பெருமிதம் !

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பாலாசாஹேப் விகே படேல்லின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்த தகவலை தெரிவித்தார். உணவுப்பொருள் வழங்குவோர் என்ற நிலையில் இருந்து தொழில்முனைவோர் என்ற நிலைக்கு விவசாயிகளை உயர்த்தும் வகையில் நாட்டில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.

”வேளாண் சீர்திருத்தங்களால் தொழில்முனைவோர்களாக மாறும் விவசாயிகள்”- பிரதமர் மோடி பெருமிதம் !

மேலும், நாடு சுதந்திரமடைந்த பிறகு, ஏற்பட்ட உணவுப்பொருள் தட்டுப்பாடு காரணமாக, அரசுகளும் அதன் கொள்கைகளும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தியதே தவிர, விவசாயிகளின் வருமானத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை என குறிப்பிட்ட மோடி, தனது அரசு. விவசாயிகளின் நலன் கருதி, அவர்களுக்கான வருமானத்தை பெருக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

  • எஸ். முத்துக்குமார்