“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்!

 

“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ,மகள் கதீஜா ரஹ்மான் இந்தியில் உருவாகி இருக்கும் ஃபரிஷ்தா என்ற பாடல் மூலம் பாடகியாகியுள்ளார். இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அன்பின் முக்கியத்தை பதிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், மத ஒற்றுமையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்!

அனிமேஷன் வீடியோவுடன் இப்பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் , புர்கா அணிந்த சிறுமி கடவுளின் கருத்துக்களுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறார். தமிழிலும் வெளியாகியுள்ள இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள கதீஜா ரஹ்மான், பாடுவதற்கு எனக்கு உத்வேகம் அளித்த லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு நன்றி. எனக்காக தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்கி எனக்காக உங்கள் பாராட்டுகளையும், ஆசீர்வாதத்தையும் அளித்துள்ளீர்கள். அத்துடன் சர்வவல்லமை கொண்ட என் பாட்டி கரீமா பேகம், என் தாய்வழி தாத்தா – அப்துல் சத்தார், அம்மா, அப்பா, ரஹீமா, அமீன், என் தாய்வழி மாமாக்கள் மற்றும் அத்தைகள் மற்றும் தாய்வழி மற்றும் தந்தைவழி தரப்பைச் சேர்ந்த எனது உறவினர்கள், எனது ஆசிரியர்கள் என அனைவர்க்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.