விடைபெற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… முதல்வர் வழியனுப்பி வைத்தார்

 

விடைபெற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… முதல்வர் வழியனுப்பி வைத்தார்

தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் இருந்து இன்றுடன் விடைபெற்று செல்லும் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விடைபெற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… முதல்வர் வழியனுப்பி வைத்தார்

தமிழ்நாட்டின் 14-அது ஆளுநரான பன்வாரிலால் புரோகித் சில தினங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பஞ்சாப் புறப்பட்டு செல்கிறார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக் நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாளை மறுதினம் சென்னைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரும் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, புதிய ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்