’இதை பல வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே’ ரஜினி ட்விட்டுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்

 

’இதை பல வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே’ ரஜினி ட்விட்டுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதற்கு தானே முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ’நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரின் ரசிகர்கள் மீண்டும் அவரை அரசியலுக்கு அழைத்துக்கொண்டே இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திரண்ட ரஜினி ரசிகர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை அறிந்த ரஜினிகாந்த் இன்று டிவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

’இதை பல வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே’ ரஜினி ட்விட்டுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்

அதில், ”நான் அரசியலுக்கு வருவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

’இதை பல வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாமே’ ரஜினி ட்விட்டுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்

இந்த அறிக்கைக்கு ட்விட்டரில் அவரின் ரசிகர்கள் என்ன ரியாக்‌ஷன் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தோம்.
அர்ஜூன் என்பவர், ‘Love u forever Thalaivaaaa..Face throwing a kiss
அரசியலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம்…நீங்க மட்டும் எங்களுக்கு போதும்’ என்று பதிவிட்டுள்ளார்.

தீ (ரஜினி குரு) என்பவர், ’தலைவா உங்க கொள்கை என்ன என்று எடுத்து வைங்க அதை செய்பவர்களுக்கு உங்க குரல் கொடுங்க ஒரு ரசிகனின் வேண்டு கோள்’ என்று தெரிவித்துள்ளார்.

ராபின் என்பவர், ‘Neenga nalla irunga thalaiva❤Smiling face with heart-shaped eyes. அரசியலுக்கு வரலனாக்கூட பரவாயில்ல நீங்கதான் முக்கியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

சுபாஷ் என்பவர், “இந்த முடிவு உங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது… இந்த சமயம் அரசியல் தேவை இல்லை… உங்கள் உடல் நிலைமையை சரி செய்து நிரந்தர சூப்பர் Star ஆக தமிழ் சினிமாவில் வலம் வாருங்கள்’ என்று அக்கறையுடன் கூறியுள்ளார்.

விவேக் என்பவர், ’இதை பல வருசம் முன்னால் சொல்லியிருக்கலாம், இத்தனை வருசம் படத்துல வசனம் பேசி ஏமாத்தினிங்க, உங்களை நம்பின பலரை கை விட்டு விட்டீர்கள், உங்கள் ரசிகர்கள் மிகவும் பாவம். இனி திரைப்படமும் நடிக்காதீர்கள் சார், உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்’ என்று தெரிவிருத்துளார்.

இன்னும் சிலர் இந்த அறிக்கையில் உள்ள கையெழுத்து ரஜினிகாந்த்துடையதே இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். வழக்கம்போல சிலர் அறுவெறுப்பான கமெண்ட்டுகளையும்பதிவிட்டுள்ளனர்.