’’ரசிகர்கள்தான் எங்கள் முதலாளிகள்; அவர்களை நாங்கள் காப்பாற்றுவோம்’’-முதல்வருக்கு திரையரங்க உரிமையாளர்கள் கொடுக்கும் உறுதி

 

’’ரசிகர்கள்தான் எங்கள் முதலாளிகள்; அவர்களை நாங்கள் காப்பாற்றுவோம்’’-முதல்வருக்கு திரையரங்க உரிமையாளர்கள் கொடுக்கும் உறுதி

ன்னதான் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் படங்கள் பார்த்து வந்தாலும், தியேட்டரில் போய் பார்க்கும் அனுபவத்திற்கு அது ஈடாகுமா? வீட்டில் உட்கார்ந்து கொண்டு விசில் அடிக்க முடியுமா? சுற்றிலும் குடும்பத்தினர் இருக்க, ஒன்ஸ்மோர்தான் கேட்க முடியுமா? தியேட்டர் அனுபவம் தியேட்டர் அனுபவம்தான் அதற்கு ஈடு கிடையாது. அந்த அனுபவத்திற்காகத்தான் ரசிகர்கள் கடந்த ஐந்து மாதங்களாக தவமாய் தவமிருக்கின்றனர். திரைக்கு வர புதுப்படங்களும் காத்திருக்கின்றன. திரையிட திரையரங்கு உரிமையாளர்களும் தயாராக இருக்கின்றனர். கொண்டாடுவதற்காக ரசிகர்கள் துடியாய் துடிக்கின்றனர். இந்த கொரோனாதான் எல்லாவற்றையும் முடக்கி வைத்திருக்கிறது.

அடுத்த ஊடரங்கு தளர்விலாவது திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து திரையரங்கு ரிமையாளர்களின் சார்பாக, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச்செயலாளர் ஸ்ரீதர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’தமிழகத்தில் 1,020 தியேட்டர்கள் உள்ளன. அந்த தியேட்டர்களில் 25 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வந்தார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டர் ஊழியர்கள், தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 10 லட்சம் பேர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை காப்பாற்ற வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்’’என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ‘’மத்திய-மாநில அரசுகள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராக இருக்கிறோம். அதனால் மத்திய-மாநில அரசுகள் நல்ல முடிவெடுத்து படப்பிடிப்புகளை தொடங்கவும், திரையரங்குகளை திறப்பதற்கும் உடனடியாக உத்தரவிட வேண்டும். திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருபவர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களை காப்பாற்றும் உரிமை எங்களுக்கு இருக்கிறது’’என்று உறுதி அளித்துள்ளார்.