எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து ரசிகர் அஞ்சலி

எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து ரசிகர் அஞ்சலி

தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று பாடிய எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து தனது அஞ்சலியை செலுத்தி இருக்கிறார் தங்க நகை பட்டறை தொழிலாளி.

எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து ரசிகர் அஞ்சலி

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா (உன்னால் முடியும் தம்பி) என்பவர்
கோவையை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது பல்வேறு வகையிலான சிற்பங்கள் செய்வது வழக்கமாக கொண்டு உள்ளவர்.சிறிய அளவிலான உலக கோப்பை,எம். ஜி. ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம். ஜி. ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம்,இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பது சுதந்திர தினத்தன்று காந்தி, திலகர், பகத்சிங், விவேகானந்தர், நேதாஜிபாரதியார், நேரு, ஆசாத், ராஜாராம் மோகன்,ஜாகீர் உசேன், அப்துல் கலாம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உருவங்களை மெழுகுவர்த்தியால் உருவாக்கி இருக்கிறார்.

எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து ரசிகர் அஞ்சலி

தற்போது பாடகர் எஸ்.பி.பி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தியில் ஆயில் பெயிண்டிங் மூலம் எஸ்.பி.பியின் உருவத்தை வரைந்துள்ளார். இது குறித்து, யு.எம்.டி ராஜாவிடம் கேட்டபோது, ’’உன்னால் முடியும் தம்பி தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி, என்பன போன்ற பாடல்கள் மூலம் பல்வேறு இளைஞர்களின் திறமைகளை வெளி கொண்டு வந்தவர் எஸ்.பி.பி. அதில் தானும் ஒருவன்’’என்றார்.

எஸ்.பி.பி மறைவிற்கு மெழுகுவர்த்தியில் ஓவியம் வரைந்து ரசிகர் அஞ்சலி

மேலும், ‘’மக்களை விட்டு நீங்காது என்றும் ஒளியாக இருப்பார் என்பதை உணர்த்தும் வகையில் மெழுகுவர்த்தியில் இதனை வடிவமைத்தேன்’’என்று தெரிவித்தார்.