தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி சி.டி.மணியுடன் காரில் வரும்போது அவர்களைக் கொல்லும் முயற்சி நடந்தது. கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. காரை எதிர் திசையில் செலுத்தி, நூலிழையில் இருவரும் தப்பிச் சென்றனர். இச்சூழலில் நீண்ட நாளாக தலைமறைவாகியிருந்த மணியை கடந்த வாரம் போலீஸார் கைது செய்தனர்.

தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

அப்போதே மற்றொரு பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜியை கைதுசெய்ய தீவிரம் காட்டினர். இச்சூழலில் நேற்று விழுப்புரத்தில் வைத்து பாலாஜியை போலீஸார் கைது செய்தனர். அப்போது தப்பியோட முயன்றார் பாலாஜி. இதன் காரணமாக வழுக்கி விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்குப் பிறகு அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாவுக்கட்டு போட்டபின் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தப்பியோட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி… மாவுக்கட்டில் முடிந்த பரிதாபம்!

ஆரம்பத்தில் அடிதடிகளில் ஈடுபட்ட பாலாஜி பெரிய குற்றங்களைச் செய்து தாதாவாக உருவெடுத்தார். ரவுடிகளுக்கு இடையே நடந்த கொலைகள், கூலிப்படைகளை ஏவிக் கொல்லுதல் போன்ற காரியங்களால் சென்னையின் பல காவல் நிலையங்களில் காக்கா தோப்பு பாலாஜி மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அடிக்கடி சிறை செல்வதும், பின்னர் ரிலீஸ் ஆவதும் அவரின் வாடிக்கையாகிப் போனது. அதுமட்டுமில்லாமல் பாலாஜி சிறைக்குள் இருந்தே ஸ்கெட்ச் போட்டு வெளியே கூலிப்படைகளை ஏவிக் கொலை செய்வதில் கைதேர்ந்தவர். நடுவே செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டார்.