‘இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வந்த ஊழியர்கள்’.. கோவையில் பிரபல நகைக்கடைக்கு சீல்!

‘இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வந்த ஊழியர்கள்’.. கோவையில் பிரபல நகைக்கடைக்கு சீல்!

கோவை காஸ்கட் சாலையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. அந்த நகைக்கடை ஊழியர்கள் முறையான அனுமதி இல்லாமல் சென்னையில் இருந்து வந்து கோவையில் தங்கி பணிபுரிவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசாரும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அந்த நகைக்கடைக்கு சென்றுள்ளனர்.

‘இ-பாஸ் இல்லாமல் சென்னையில் இருந்து வந்த ஊழியர்கள்’.. கோவையில் பிரபல நகைக்கடைக்கு சீல்!

அதன் பின்னர் அங்கு மேற்கொண்ட விசாரணையில், கொரோனா அதிகமாக பரவி வரும் சென்னையில் இருந்து இ-பாஸ் இல்லாமல் யாரும் வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பினும் விதியை மீறி, நகைக்கடை நிர்வாகம் ஊழியர்களை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும், சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப் படுவதற்கு முன்னரே பெண்கள் 20 பேர் மற்றும் ஆண்கள் 19 பேர் என 39 தொழிலாளர்களை அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து. தனிமை படுத்தியுள்ளனர். அரசு உத்தரவை மீறி செயல்பட்டதால், நகைக்கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.