• February
    17
    Monday

Main Area

Main



காதலர் தினத்தில் முரட்டு சிங்கிள்ஸ்களுக்கு ஸ்பெஷல் அறிவிப்பை வெளியிட்ட பிரபல ஹோட்டல்

singles dosa
singles dosa

பெரும்பாலும் பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே காதலர் தினம் பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கும். ஆனால் இந்த காதலர் தினத்தை கரோனா சற்று கலங்க வைத்துள்ளது. இருந்தாலும் அவர்கள் அடங்குவது போல் தெரியவில்லை. காதலர் தினத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பே kissday, chocolate day என விதவிதமாக ;டே’ க்களை கொண்டாடி சிங்கிள்ஸ் நெஞ்சங்களில் ஈட்டியை பாய்ச்சுவர். காதலி இல்லாத பல இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மூலம் தங்களின் மனப் புகைச்சலை வெளிப்படுத்துவார்கள். 

a2b-hotel

காதலர் தினத்துக்கு பெரும்பாலும் அனைவரும் காதலர்களுக்கு தான் பல அறிவிப்பு சலுகைகளை அள்ளி வழங்குவார்கள். 
ஆனால் அடையார் ஆனந்த பவன் காதலி இல்லாதவர்களுக்கென்றே தனி உணவு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஆமாம் சிங்கள்ஸுக்கு ஸ்பெஷலாக சிங்கிள்ஸ் தோசையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த உணவு  சென்னை வேளச்சேரி, பள்ளி கரணை , ஓஎம்ஆர் - சிப்காட், அடையார்-எம்ஜி தெரு, கிழக்குத் தாம்பரம் - கேம்ப் ரோடு, குரோம்பேட்டை, போரூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள அடையார் அனந்த பவனின் கிளைகளிலும் பிப்ரவரி 10 முதல் 16 தேதி வரை கிடைக்கும். 

singles-dosa-09

இந்த தோசையை ‘சார்க்கோல்’ எனப்படும் கரியை வைத்து தயாரிக்கிறார்கள். 
சார்க்கோல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதாவும், உடலின் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் திறன் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது உடலின் செரிமான சக்தியை அதிகமாக்குவதாகவும், சார்க்கோல் என்னும் பொருளை தொடர்ந்து உணவில் பயன்படுவது உடலுக்கு தீங்கானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

காதலி இல்லாதவர்களுக்கு இந்த காதலர் தினம் கருப்பு தினமாக இருக்கட்டும் என கருப்பு தோசையை அறிமுகப்படுத்தியுள்ளனர் போல...

 

2018 TopTamilNews. All rights reserved.