வீட்டிற்குள் 50 அடியில் குழி; இருவர் மூச்சுத்திணறி பலி : பேராசையால் போலீசிடம் சிக்கிய நபர்!!

வீட்டிற்குள் 50 அடியில் குழி; இருவர் மூச்சுத்திணறி பலி : பேராசையால் போலீசிடம் சிக்கிய நபர்!!

சாமியார் பேச்சை கேட்டு நரபலி, புதையல் வேட்டை இதெல்லாம் தினமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கமான செய்திகளாகி விட்டன. புதையல் இருக்கிறது வீட்டை பள்ளம் போடுங்கள் என்று போலி சாமியார் கூறியதை கேட்டு வீட்டை இழந்தவர்கள் மட்டுமல்ல உயிரை இழந்தவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். அப்படி தூத்துக்குடியில் இப்படி ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வீட்டிற்குள் 50 அடியில் குழி; இருவர் மூச்சுத்திணறி பலி : பேராசையால் போலீசிடம் சிக்கிய நபர்!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியைச் சேர்ந்தவர் முத்தையா. இவர் தனது வீட்டில் கடந்த 6 மாத காலமாக 50 அடியில் குழி தோண்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக குழியில் தண்ணீர் தேங்கியதால், பணிகள் நிறுத்தப்பட்டு பின்னர் தண்ணீரை வெளியேற்றிவிட்டு மீண்டும் குழி தோண்டியுள்ளார்.

வீட்டிற்குள் 50 அடியில் குழி; இருவர் மூச்சுத்திணறி பலி : பேராசையால் போலீசிடம் சிக்கிய நபர்!!

அப்போது, திடீர் மூச்சு திணறல் காரணமாக குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் முத்தையாவின் இரு மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் மயங்கி விழந்துள்ளனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனையில் நால்வரையும் அனுமதித்த நிலையில் ரகுபதி, நிர்மல் கணபதி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து முத்தையா மகன்கள் இருவருக்கும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டில் தங்கப் புதையல் இருக்கிறது என்று கேரள மாந்திரீகர் கூறியதால் தங்கப்புதையல் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார்.