லிவ்வீங் டூ கெதரில் இருந்தால் பாலியல் வன்கொடுமையாகுமா? பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

 

லிவ்வீங் டூ கெதரில் இருந்தால் பாலியல் வன்கொடுமையாகுமா? பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

உத்திர பிரதேசத்தை சேர்ந்த வினய் பிரதாப் சிங் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக வினய் பிரதாப் சிங்குடன் லிவ்விங் டூ கெதரில் இருந்த ஒரு பெண், அவர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் வினய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக 2019 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இரண்டு ஆண்டுகளாக இரண்டு பேரும் ஒற்றுமையுடன் தான் வாழ்ந்திருக்கிறீர்கள். வினய் பாலியல் வன்கொடுமை செய்தது உண்மையென்றால் அவர் உங்களுடன் இருக்கும்போதே நீங்கள் இந்த புகாரை கொடுத்திருக்கலாம். ஏன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்கு பின் இந்த புகாரை கொடுத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

லிவ்வீங் டூ கெதரில் இருந்தால் பாலியல் வன்கொடுமையாகுமா? பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

அதற்கு பாதிக்கப்பட்ட பெண், வினய் பிரதாப் சிங் தனக்கு பொய்யான வாக்குறுதி அளித்ததாகவும், திருமணம் செய்யாமல் உடலுறவில் ஈடுபட மாட்டேன் என சொன்னதற்காக மணலியில் உள்ள கோவில் ஒன்றுக்கு அழைத்து சென்று போலியாக தன்னை திருமணம் செய்து கொண்டு நாடகமாடியதாகவும் குற்றஞ்சாட்டினார். அந்த நாடக திருமணத்திற்கு பின்னர் தன்னிடம் உடலுறவு கொண்டதாகவும், தன்னை தாக்கியதாகவும் புகார் கூறினார்.

இதனை கேட்ட நீதிபதி பாப்டே, இப்போது இவ்வளவு கூறும் நீங்கள், வினய் உடன் இருக்கும்போதே அந்த இரண்டு ஆண்டுகளிலேயே அவரை பற்றி தெரிந்த உடனேயே, அவரால் தாக்குதலுக்கு ஆளாகும்போதே இந்த புகாரை கொடுத்திருக்கலாமே என தெரிவித்தார். மேலும் வினய் உங்களை தாக்கியது உண்மையாக இருக்கலாம். ஆனால் இருவரும் மனம் உவந்து ஈடுபட்ட உடலுறவை பாலியல் வன்கொடுமை என சொல்லமுடியாது எனக்கூறி, வினய்யை கைது செய்ய 4 வாரங்களுக்கு தடை விதித்தார். மேலும் வினய் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கூடாது என உத்தரவிட்டு, கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உத்தரவிட்டார்.