உங்களுக்கு கொரோனா… பதறிய பொதுமக்கள்… கோடிக்கணக்கில் வசூலித்த டாக்டர்கள்!- திருச்சி கலெக்டர் காட்டிய அதிரடி

 

உங்களுக்கு கொரோனா… பதறிய பொதுமக்கள்… கோடிக்கணக்கில் வசூலித்த டாக்டர்கள்!- திருச்சி கலெக்டர் காட்டிய அதிரடி

திருச்சியில் கொரோனா பரிசோதனை செய்ய வரும் பொதுமக்களுக்கு தவறான ரிசல்ட் கொடுத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய தனியார் பரிசோதனை மையத்துக்கு கலெக்டர் அதிரடியாக சீல் வைத்துள்ளார்

திருச்சி மாவட்டம், உறையூரில் டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் என்கிற பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது. இந்த பரிசோதனை மையத்தை 15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து நடத்தி வருகிறார்கள். இங்கு ரத்தம் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மையத்துக்கு கொரோனா டெஸ்ட் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இதனிடையே, இந்த பரிசோதனை மையத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வந்தது. இங்கு வரும் மக்களுக்கு தாமதமான ரிசல்ட் கொடுப்பதும், கொரோனா இருப்பதாக பொய்யான தகவல்களையும் கூறிவந்துள்ளனர். அப்படி வரும் மக்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்தது தெரியவந்துள்ளது.

உங்களுக்கு கொரோனா… பதறிய பொதுமக்கள்… கோடிக்கணக்கில் வசூலித்த டாக்டர்கள்!- திருச்சி கலெக்டர் காட்டிய அதிரடி

இந்த நிலையில், பரிசோதனை மையத்துக்கு எதிராக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தது. இதையடுத்து, பரிசோதனை கூடத்துக்குள் சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, பொதுமக்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, புகாருக்கு பதில் அளிக்கும்படி அந்த மையத்துக்கு ஐந்து முறை நோட்டீஸ் அனுப்பினர் அதிகாரிகள். ஆனால் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த மையத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்ட கலெக்டர் சிவராசு, கொரோனா பரிசோதனை மையத்தின் உரிமையை ரத்து செய்யவும் ஆணை பிறப்பித்தார்.

அந்த மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இந்த மையத்தின் கட்டிடம் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நான்கு மாடிக் கட்டிடத்துக்குச் சீல் வைத்தனர்.