தமிழக வீரர் நடராஜனின் யாக்கரில் வீழ்ந்த விக்கெட்டுகள் – அவரின் அம்மா ஆனந்த கண்ணீர்

தமிழக வீரர் நடராஜனின் யாக்கரில் வீழ்ந்த விக்கெட்டுகள் – அவரின் அம்மா ஆனந்த கண்ணீர்

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கான மூன்றாம் மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடந்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. 76 பந்துகளில் 92 ரன்களை விளாசினார் ஹிர்த்திக் பாண்டியா, 50 பந்துகளில் 66 ரன்களைக் குவித்தார் ஜடேஜா.

தமிழக வீரர் நடராஜனின் யாக்கரில் வீழ்ந்த விக்கெட்டுகள் – அவரின் அம்மா ஆனந்த கண்ணீர்

303 எனும் வெற்றி இலக்கோடு ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனிங் வீரர் லபுசாக்னேவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் தமிழக வீரர் நடராஜன் தங்கராசு. இதுவே அவரின் முதல் போட்டி. அடுத்து அகர் வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் ‘யாக்கர்’ ஸ்பெஷலிஸ்ட் நடராஜன்.

இந்திய அணியில் எளிய குடும்ப பின்னணியில் இருந்து இடம்பிடித்த நடராஜனின் வெற்றியை சோஷியல் மீடியாவே கொண்டாடி வருகிறது.

தமிழக வீரர் நடராஜனின் யாக்கரில் வீழ்ந்த விக்கெட்டுகள் – அவரின் அம்மா ஆனந்த கண்ணீர்

இன்று காலை போட்டி தொடங்கியதுமே நடராஜனின் அம்மா, உறவினர்களோடு டிவியி போட்டியைப் பார்த்து வந்தார். முதல் விக்கெட்டை நடராஜனின் அம்மா பார்த்ததும், கைத்தட்டி மகிழ்ந்ததும் இல்லாமல், ஆனந்த கண்ணீர் வடித்தார்.

நடராஜனின் விக்கெட்டுகள் வீழ்த்துதல் மட்டுமல்ல, இன்றைய போட்டியில் இந்திய் அணி வெற்றியும் பெற்றிருப்பதால் டபுள் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.