“உஷார் நாம சாப்பிடுறது உப்புதானா ?”-டெல்லியில் ‘டாடா’ பெயரில் போலியாக உப்பு தயாரிக்கும் கும்பல் அதிரடி கைது ..

 

“உஷார் நாம சாப்பிடுறது உப்புதானா ?”-டெல்லியில் ‘டாடா’ பெயரில் போலியாக உப்பு தயாரிக்கும் கும்பல் அதிரடி கைது ..

நாட்டில் விலையுயர்ந்த உணவுப்பொருட்களில்தான் கலப்படம் செய்வார்கள் .ஆனால் இப்போது மிகவும் மலிவான உப்பில் கூட போலிகளும் ,கலப்படமும் செய்து விற்பதை டெல்லியில் அதிரடி சோதனையில் கன்டுபிடித்துள்ளனர் .

“உஷார் நாம சாப்பிடுறது உப்புதானா ?”-டெல்லியில் ‘டாடா’ பெயரில் போலியாக உப்பு தயாரிக்கும் கும்பல் அதிரடி கைது ..வடக்கு டெல்லியின் பிரஹலத்பூர் பங்கரில் சூரஜ்மல் சிங்கால் என்பவர் போலியாக டாடா உப்பு தயாரித்து விற்பதாக டெல்லி போலீசுக்கு தகவல் கிடைத்தது .இதனால் உடனடியாக வெள்ளிக்கிழமை டிசிபி கௌரவ் சர்மா தலைமையில் ஒரு போலீஸ் படை சிங்காலின் கடையினை சோதனை நடத்தியது.

“உஷார் நாம சாப்பிடுறது உப்புதானா ?”-டெல்லியில் ‘டாடா’ பெயரில் போலியாக உப்பு தயாரிக்கும் கும்பல் அதிரடி கைது ..

அப்போது பல மூட்டைகளில் போலியாக டாடா உப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர் .மேலும் போலீசார் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் மோசடியை முறியடித்து 3,000 கிலோவிற்கு மேற்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட போலி உப்பினை மீட்டனர்.

http://


நிறுவனத்தின் உரிமையாளர் சூரஜ்மல் சிங்கால் கைது செய்யப்பட்டு பதிப்புரிமைச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கரலா கிராமத்தில் போலி உப்பு உற்பத்தி பிரிவு இயங்கி வருவதாக விசாரணையின் போது சிங்கால் தெரிவித்தார்.இந்த சோதனை பற்றி டி.சி.பி . கவுரவ் சர்மா கூறுகையில் “எங்கள் குழு உற்பத்தி பிரிவின் வளாகத்தில் சோதனை நடத்தியது. அப்போது பல மூட்டைகள் போலி உப்பு மற்றும் பிற இயந்திரங்களை கைப்பற்றியது” என்று அவர் கூறினார்.