செப்.14 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வைரலாகும் போலி அறிக்கை!

 

செப்.14 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வைரலாகும் போலி அறிக்கை!

கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுக்குள் வரும்வரை பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவாக கூறிவருகிறது.

செப்.14 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வைரலாகும் போலி அறிக்கை!

இந்நிலையில் நேற்றைய தேதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை என தவறான போலி சுற்றறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த அறிக்கையில், “தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படும், மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். திரையரங்குகள் அக்டோபர் 1 ஆம் தேதி திறக்கப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். இருக்கைகளும் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். தமிழகம் விரைவில் இயல்பான நிலைக்கு திரும்பும்” என அசலைப் போலவே இருக்கும் அறிக்கையை சில விஷமிகள் பிரிண்ட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை என்றும், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு இல்லை என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.