போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

 

போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வராக திமுக தலைவர் பதவியேற்றதில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், 27 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். புதிதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எனது தலைமையிலான அரசு நான் போடும் உத்தரவு மட்டுமல்ல; மாவட்ட ஆட்சியர்களின் கருத்தையும் கேட்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். நகர்புற வளர்ச்சியும், ஊரக வளர்ச்சியும் தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள். மகளிர் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பொது விநியோகத் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.