• March
    28
    Saturday

Main Area

Main



போலி தங்க நகை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி! பேராசையால் ஏமாந்த டாக்டர்!

மாதிரி படம்
மாதிரி படம்

தமிழகத்தில், மக்களின் அதீத பேராசையினால் விதவிதமாக ஏமாற்றமடைந்து வருகிறார்கள். கோவை,  பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் யுனானி மருத்துவம் பார்த்து வருபவர் டாக்டர் நடராஜன். இவரை, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் டிரைவராக பணிபுரியும் அக்பர் என்பவர் சந்தித்தார். அப்போது மருத்துவர் நடராஜனிடம், எங்கள் ஊரான கோவிந்தாபுரத்திற்கு வந்தால், ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை ரூ.15 லட்சத்திற்கு தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறினார். டிரைவர் அக்பரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய டாக்டர் நடராஜன் உடனடியாக அக்பரிடம் ரூ.5 லட்சம் கொடுத்தார். ரூ.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட அக்பர், தன்னிடம் இருந்த தங்க நாணயங்களை ரூ.5 லட்சத்திற்கு அதிகமாகவே மதிப்பு வரும்படி கொடுத்தார். இவற்றை பரிசோதித்துப் பார்த்த டாக்டர், அவை உண்மையான தங்கம் என்பதைத் தெரிந்துக் கொண்டார். 

fake gold

அதன் பிறகு டிரைவர் அக்பருடன் அவர் குறிப்பிட்ட கோவிந்தாபுரத்திற்கு சென்றார். காத்திருக்கும் படி சொல்லி விட்டு, கையில் ஒரு பையுடன் வந்தார். ரூ.10 லட்சம் கொடுத்து தங்க நகைகள் தருமாறு டாக்டர் கேட்டதும், டாக்டரின் கையிலிருந்த ரூ.10 லட்சத்தையும் வாங்கிக் கொண்டு தான் கொண்டு வந்த நகை பையை காருக்குள் தூக்கியெறிந்து விட்டு அக்பர் தப்பி ஓடினார். பின்னர் நகைப் பையை எடுத்துப் பார்த்த டாக்டர் நடராஜன், அவை அத்தனையும் போலி நகைகள் என்பதை அறிந்து, அதிக பேராசையால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.  இது குறித்து கொல்லங்கோடு போலீசில் புகாரளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், நகை மோசடியில் ஈடுபட்ட அக்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.