போலி பேஸ்புக் கணக்கு துவங்கி பணம்கேட்டு தொந்தரவு; குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் புகார்

போலி பேஸ்புக் கணக்கு துவங்கி பணம்கேட்டு தொந்தரவு; குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் புகார்

திருச்சி

தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினரின் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி, பலரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த நபர் மீது திருச்சி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக இருப்பவர், ஆர்.ஜி.ஆனந்த்.

போலி பேஸ்புக் கணக்கு துவங்கி பணம்கேட்டு தொந்தரவு; குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் புகார்

இவரது பெயரில் போலி முகநூல் கணக்கை துவங்கிய மர்மநபர்கள், அவரது நணர்களிடம் தனியே சாட் செய்து, தமக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பணம் கேட்டு தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து அறிந்த ஜி.ஆர்.ஆனந்த், தான் யாரிடமும் பணம் கேட்கவில்லை என்று மறுப்பு பதிவினை வெளியிட்டார். இந்த நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கவும், போலி முகநூல் கணக்கை முடக்கவும் கோரி, நேற்று ஜி.ஆர். ஆனந்தின் சார்பில் அவரது சகோதரர் ஹரிஷ்பாபு, திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.