கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி செல்வதற்கு முடிவெடுத்துள்ளார். இதற்காக இ பாஸ் வாங்கும் முயற்சியில் இறங்கிய சுரேஷ் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் என்பதற்காக சென்னை சிஐ டி நகர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை அணுகியுள்ளார்.
இதையடுத்து இ பாஸ் வாங்கி தருவதாக உறுதி அளித்த பிரகாஷ் ரூபாய் 4 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு போலியான இ-பாஸை தயாரித்து சுரேஷ்குமாரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடன் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்றுள்ளார்.
ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் அந்த குறிப்பிட்ட அந்த காரை சோதித்தபோது இ பாஸ் பார் கோட்டை ஸ்கேனர் மூலம் சோதித்து பார்த்தனர். அப்போதுதான் அந்த போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த காரில் பயணித்த கர்ப்பிணி ஸ்ரீஜா மற்றும் அவரது உறவினர்கள் 4 பேரையும் போலீசார் தனிமைப்படுத்த அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.