கொரோனாவில் உலாவரும் போலி மருத்துவர்கள்! ஒரே நாளில் 10பேர் கைது

 

கொரோனாவில் உலாவரும் போலி மருத்துவர்கள்! ஒரே நாளில் 10பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள போலி மருத்துவர்களை ஒழிக்க மாவட்ட இணை இயக்குநரக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், வருவாய் துறையினர் சிறப்பு குழுக்கள் அமைத்து கடந்த 4 நாட்களாக தீவிர ஆய்வு மேற்க்கொண்டனர். இதில் குடியாத்தம், வேலூர், அரியூர், வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் நடத்திவந்த ஆங்கில மருத்துவ கிளினிக் மூடப்பட்டு மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவில் உலாவரும் போலி மருத்துவர்கள்! ஒரே நாளில் 10பேர் கைது

கீதா மருத்துவமனையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாரதி கிளினிக்கை சேர்நத பாரதி, கலை கிளினிக்கை சேர்ந்த பொன்னரசன், மகி மெடிக்கல்ஸை சேர்ந்த சீனிவாசன், மஞ்சுளா கிளினிக்கை சேர்ந்த மஞ்சுளா, மதானி கிளினிக்கை சேர்ந்த குல்னாஸ்ருஜி மற்றும் மோகன்ராஜ் கிளினிக்கை சேர்ந்த நளினி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் டிசி குப்பத்தை சேர்ந்த நரசிம்மன், குமரன் மருத்துவமனையை சேர்ந்த காந்தி, மேல் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரையும் சுகாதாரத்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட ஆட்சியர், “கொரோனா பாதிப்புக்கு இடையே போலி டாக்டர்களிடம் மக்கள் சென்று ஏமாறாதவண்ணம், வருவாய்த்துறை, காவல்துறை, மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் 50 பேர் அடங்கிய பத்து சிறப்புக்குழுக்கள் இணை இயக்குநர், மருத்துவப்பணிகள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, அதிரடி ரெய்டுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டன. இதில் மேற்கண்ட பத்து போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது போலி மருத்துவமனைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் போலிமருத்துவர்கள் பற்றிய தகவல் அறிந்தால், மாவட்ட ஆட்சியரின் குறைதீர்வு வாட்ஸ்ஆப் எண் 9498035000-க்கு தொடர்பு கொண்டு தகவல் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.