‘ரூ.25,000 கொடுத்தால் மருத்துவர் சான்றிதழ்’ போலி மருத்துவர் அதிரடி கைது!

‘ரூ.25,000 கொடுத்தால் மருத்துவர் சான்றிதழ்’ போலி மருத்துவர் அதிரடி கைது!

கரூர் அருகே ரூ,25 ஆயிரம் கொடுத்து போலி மருத்துவ சான்றிதழ் வாங்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபாண்டி (41) என்பவர், கிளினிக் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு இந்தியன் மெடிக்கல் கவுன்சிலில் மருத்துவர் சான்றிதழ் பெற்ற நிலையில், அவர் போலி மருத்துவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரும்பாக்கம் போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர். ஆனால் அவர் தலைமறைவானதால் அவரை பிடிக்க முடியவில்லையாம்.

‘ரூ.25,000 கொடுத்தால் மருத்துவர் சான்றிதழ்’ போலி மருத்துவர் அதிரடி கைது!

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஜெயபாண்டி ஆவடியில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையறிந்த போலீசார் அவரை கைது செய்ய விரைந்துள்ளனர். அப்போது, ஜெயபாண்டி கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்னர். அதன் படி, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்ற போலீசார், ஜெயபாண்டியை கைது செய்துள்ளனர்.

‘ரூ.25,000 கொடுத்தால் மருத்துவர் சான்றிதழ்’ போலி மருத்துவர் அதிரடி கைது!

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருச்சியை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கொடுத்து கவுன்சிலில் பதிவு செய்ததாகவும் தன்னை போல லட்சக்கணக்கானோர் போலியாக பதிவு செய்திருப்பதாகவும் ஜெயபாண்டி தெரிவித்துள்ளார். பின்னர், ஜெயபாண்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.