திண்டுக்கல் அருகே போலி மருத்துவராக செயல்பட்ட அமமுக நிர்வாகி கைது!

 

திண்டுக்கல் அருகே போலி மருத்துவராக செயல்பட்ட அமமுக நிர்வாகி கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே முறையாக படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வந்த அமமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் மருத்துவம் பார்த்து வருவதாக, சுகாதாரத் துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன் பேரில், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை இணை இயக்குநர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர், நேற்று சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் அருகே போலி மருத்துவராக செயல்பட்ட அமமுக நிர்வாகி கைது!

அப்போது, வேம்பார்பட்டி அருகே உள்ள அய்யாபட்டி பகுதியில் காளியப்பன் (54) என்பவர், தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து, மருத்துவக் குழுவினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் எம்.பி.பி.எஸ் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரது கிளினிக்குக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர்.

தொடர்ந்து, காளியப்பனை கைதுசெய்த சாணார்பாட்டி போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதனிடையே கைதான காளியப்பன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.