“அமெரிக்காவுக்கு நம்மூர்ல கிண்டிய அல்வா” – மில்லியன் டாலரை அள்ளிய கூட்டத்தோட ஐடியாவை பாருங்க..

 

“அமெரிக்காவுக்கு நம்மூர்ல கிண்டிய அல்வா” – மில்லியன் டாலரை அள்ளிய கூட்டத்தோட ஐடியாவை பாருங்க..

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையின் காண்டீவ்லி பகுதியில் இர்பான் ஷேக் (27), உமேஷ் பரேக் (35), ஜினர் உமேஷ் படேல் (25), ஆதில் உசேன் அத்வானி (21) ஆகியோர் சேர்ந்த கொண்டு போலியாக கால் சென்டர் நடத்தி,தங்களை அமெரிக்க ஏஜென்சிகளின் அதிகாரிகள் என்று பொய் சொல்லி , அமெரிக்க குடிமக்களிடமிருந்து பணம் பறித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
இதனால் போலீசார் அவர்களின் கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த கணினிகள், சிபியு மற்றும் மடிக்கணினிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பிறகு அந்த போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர் .அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது .


அவர்கள் காண்டீவ்லி பகுதியில் ஒரு கால் செண்ட்டரை 20 நாட்களுக்கு முன்புதான் ஆரம்பித்துள்ளனர் .அப்படி ஆரம்பித்த அவர்கள் தினமும் 20 அமெரிக்கர்களுக்கு போன் செய்து தங்களை அமெரிக்க அதிகாரிகள் என்று கூறியுள்ளனர் .பிறகு அவர்கள் தங்களின் சமூக பாதுகாப்பு எண்களை தரச்சொல்லி கேட்டார்கள் .அவர்கள் கேட்டு தர மறுத்தவர்களை போலி குற்ற வழக்குகளில் சிக்கவைப்பதாக அச்சுறுத்தினர்.

“அமெரிக்காவுக்கு நம்மூர்ல கிண்டிய அல்வா” – மில்லியன் டாலரை அள்ளிய கூட்டத்தோட ஐடியாவை பாருங்க..

மேலும் அமெரிக்கர்களை ஈபே அட்டையை வாங்கும்படி கட்டாயப்படுத்தினர் (ஒரு அட்டைக்கு சுமார் 4,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும்) அப்படி வாங்குபவர்களின் சமூக பாதுகாப்பு எண்ணைப் பெற்ற பிறகு, அவர்கள் அதை அமெரிக்காவில் உள்ள தங்கள் கூட்டாளியுடன் பகிர்ந்து கொண்டனர்.அதன் மூலம் அவர்கள் பல மில்லியன் டாலர்களை மோசடி செய்தனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,
அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.