Home தமிழகம் 'ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது' - மு.க.ஸ்டாலின்

‘ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது’ – மு.க.ஸ்டாலின்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜிஎஸ்டி சட்டத் தால் ஏற்படும் வருவாய் இழப்பு ஐந்து வருடங்களுக்கு ஈடு செய்யப்படும் என்று மாநிலங்களுக்கு அளித்த உத்தரவாதத்தை மத்திய பாஜக அரசு காற்றில் பறக்க விட்டுள்ளது. வசூல் செய்யப்பட்ட 47 ஆயிரத்து 272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்தி விட்டது வேண்டுமானால் மாநிலங்கள் சந்தையில் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே அமைச்சர் திரு. ஜெயக்குமார் வலுவாக எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று போராடி இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் மத்திய அரசின் முடிவு மாநில நிதி உரிமைகளுக்கு எதிரானது. வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை, அப்படி மாநில உரிமைக்காக கோரிக்கை வைக்க தைரியமும் அவருக்கு இல்லை.

தமிழ்நாட்டுக்கு 11 ஆயிரத்து 269 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை நிலுவையில் உள்ளது என்பதை கழக எம்பி வில்சன் மாநிலங்களவையில் பதிலாக பெற்றிருக்கிறார். தொகையை பெறுவதில் முதலமைச்சர் தோல்வி கண்டு நிற்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது. அக்டோபர் ஐந்தாம் தேதி நடக்கும் 42ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மற்ற மாநிலங்களின் ஆதரவினையும் பெற முயற்சிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சசிகலாவுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு : ஆணையத்தில் புகார்!

சிறையில் இருந்து விடுதலையாகவிருந்த சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தொடர்பாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா...

சசிகலாவின் உடல்நிலை… டிடிவி தினகரனுக்கு சிறைத்துறை சொன்ன தகவல்

சசிகலா நலமுடன் இருக்கிறார் என்றும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், உடல்நிலை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறியதாக சிறைத்து மூலமாக தகவல் வந்துள்ளது என்று...

சசிகலாவுக்கு இயல்பிலிருந்து ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு குறைந்தது?

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4 பேர்...

சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

உய்குர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட ட்வீட் தங்களது கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, தூதரக கணக்கை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
Do NOT follow this link or you will be banned from the site!