நீங்க UPI பரிவர்த்தனை பண்றவங்களா?… அப்போ இந்த முக்கிய விதிய தெரிஞ்கோங்க… வங்கிகள்ட்ட ஃபைன் வாங்குங்க!

நீங்க UPI பரிவர்த்தனை பண்றவங்களா?… அப்போ இந்த முக்கிய விதிய தெரிஞ்கோங்க… வங்கிகள்ட்ட ஃபைன் வாங்குங்க!

கடந்த வாரத்தில் சில நாட்கள் வங்கிகள் அனைத்தும் செயல்படவில்லை. அதில் ஏப்ரல் 1ஆம் தேதியும் அடங்கும். வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நாளில் நாடு முழுவதும் பலரும் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக அன்றைய தினம் இணைய வழி பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டாம் என வங்கிகள் வலியுறுத்தியிருந்தன.

நீங்க UPI பரிவர்த்தனை பண்றவங்களா?… அப்போ இந்த முக்கிய விதிய தெரிஞ்கோங்க… வங்கிகள்ட்ட ஃபைன் வாங்குங்க!

ஆனால் இதை அறியாத பலர் கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளிலும் NEFT, IMPS ஆகிய மின்னணு பணமாற்றம் முறையிலும் பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளனர். அப்படிச் செய்தவர்களின் கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் சென்று சேரவில்லை (Failed Transaction). பெரும்பாலோனோருக்கு இதே பிரச்சினை இருந்தவுடன் அனைவரும் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரையடுத்து ரிசர்வ் வங்கியின் விதி ஒன்று தெரியவந்துள்ளது.

நீங்க UPI பரிவர்த்தனை பண்றவங்களா?… அப்போ இந்த முக்கிய விதிய தெரிஞ்கோங்க… வங்கிகள்ட்ட ஃபைன் வாங்குங்க!

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதியன்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, ஒவ்வொரு Failed Transaction-க்கு பிறகு டெபிட் செய்யப்பட்ட பணம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீண்டும் வங்கி கணக்குக்கு திரும்பி அனுப்பவில்லை என்றால், தாமதாகும் ஒவ்வொரு நாட்களுக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது முதல் நாளில் டெபிட் செய்யப்பட்ட பணம் அடுத்த நாளுக்குள் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மூன்றாம் நாளிலிருந்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் கட்ட வேண்டும்.