’காசு கொடு – நியூஸ் ஷேர் பண்ண மாட்டேன்’ ஃபேஸ்புக் Vs ஆஸ்திரேலியா சண்டை

 

’காசு கொடு – நியூஸ் ஷேர் பண்ண மாட்டேன்’ ஃபேஸ்புக் Vs ஆஸ்திரேலியா சண்டை

இன்றைய டெக்னாலஜி உலகில் ஒரு செய்தியை விரைவாக எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதில் சோஷியல் மீடியாவின் பங்கு அளப்பரியது. அதிலும் குறிப்பாக, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாகும் செய்திகளை சாட்டிலைட் சேனல்களே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இவை இரண்டும் மாறிவிட்டன.

’காசு கொடு – நியூஸ் ஷேர் பண்ண மாட்டேன்’ ஃபேஸ்புக் Vs ஆஸ்திரேலியா சண்டை

கொரோனா காலத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கிபோய்விட்டன. தொழிலாளர்கள்  வாழ்க்கை முறையை முற்றிலுமாகக் குலைத்துவிட்டது கொரோனா நோய்த் தொற்று. குறிப்பாக, மீடியா தொடர்பான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு இணையத்தளத்திற்கான ஒரு சட்டம் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் செய்திகளை ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் பகிர்ந்தால், அச்செய்திகளுக்கு  இந்த இரு நிறுவனங்களும் ராயல்டியாக பணம் கொடுக்க வேண்டும் என்று அச்சட்டம் சொல்கிறது.

’காசு கொடு – நியூஸ் ஷேர் பண்ண மாட்டேன்’ ஃபேஸ்புக் Vs ஆஸ்திரேலியா சண்டை

இதனால், மீடியா துறை சார்ந்தவர்களுக்கு உரிய தொகையும் வாழ்வாதாரமும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அதற்காகவே இச்சட்டம் என்றும் அந்நாட்டு அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் செய்திகள் மூலம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு கிடைத்துவரும் சுமார் 6 பில்லியன் டாலர் இந்தச் செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

’காசு கொடு – நியூஸ் ஷேர் பண்ண மாட்டேன்’ ஃபேஸ்புக் Vs ஆஸ்திரேலியா சண்டை

இதனால், கூகுள் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுடன் ஒப்பந்தம் ஏற்பத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. ஆனால், ஃபேஸ்புக் நிறுவனமோ ஆஸ்திரேலிய அரசை மிரட்டும் தொனிக்கு மாறிவிட்டது.

ஆம். இச்சட்டம் வந்தால் ஆஸ்திரேலியாவில் செய்திகளைப் பகிர்வதையே தடை செய்துவிடும் என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். இது பலருக்குமே அதிர்ச்சியை அளித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் இது குறித்து கூறுகையில் ஃபேஸ்புக் தவறான ஒரு முடிவை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.