‘லாக் ப்ரொஃபைல்’ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த பேஸ்புக்

 

‘லாக் ப்ரொஃபைல்’ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த பேஸ்புக்

டெல்லி: பேஸ்புக் நிறுவனம் ‘லாக் ப்ரொஃபைல்’ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் ‘லாக் ப்ரொஃபைல்’ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் தங்கள் நட்பு வட்டத்தில் இல்லாதவர்கள் தங்கள் ப்ரொஃபைல் பக்கத்தை பார்ப்பதை பயனர்களால் தடுக்க முடியும். இந்த பாதுகாப்பு அம்சம் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த பாதுகாப்பு அம்சம் கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் உதவும் வகையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘லாக் ப்ரொஃபைல்’ அம்சத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த பேஸ்புக்

முன்னதாக, ப்ரொஃபைல் புகைப்படத்தை மற்றவர்கள் டவுன்லோட் செய்வதை தடுக்கும் வகையில் ஒரு அம்சம் பேஸ்புக்கில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் நீட்சியாகவே ‘லாக் ப்ரொஃபைல்’ அம்சம் மூலம் தங்களுடைய ஒட்டுமொத பேஸ்புக் ப்ரொஃபைல் பக்கத்தையே நண்பர்கள் அல்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.