“பேஸ்புக் நண்பரால் பாஸ்புக் காலி” -நர்ஸின் பர்சிலிருந்த 17 லட்சம் பணால் .

 

“பேஸ்புக் நண்பரால் பாஸ்புக் காலி” -நர்ஸின் பர்சிலிருந்த 17 லட்சம் பணால் .

ஒரு நர்ஸிடம் பேஸ்புக்கில் பழகிய ஒரு வாலிபர், அவரிடமிருந்து 17 லட்சம் ரூபாயை நூதனமான முறையில் ஆட்டைய போட்ட கதையை கேட்டால் கண்ணீர் வரும் .

“பேஸ்புக் நண்பரால் பாஸ்புக் காலி” -நர்ஸின் பர்சிலிருந்த 17 லட்சம் பணால் .

வடக்கு மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரியம் ஒரு பெண்ணுக்கு சமூக ஊடகத்தில் கடந்த மாதம் வில்பிரெட் என்பவர் நண்பராக அறிமுகமானார் .அப்போது அவர் தான் லண்டனில் டாக்டராக பணிபுரிவதாக கூறி, அந்த நர்ஸுடன் நண்பராக பழகினார் .அந்த நர்ஸும் ஒரு லண்டன் டாக்டர் நம்மோடு பழகுவதை பெருமையாக நினைத்து அவரோடு பல நாட்களாக அரட்டையடித்து வந்துள்ளார் .இந்நிலையில்,ஆகஸ்ட் 17ம் தேதியன்று அந்த டாக்டர் வில்பிரெட் அந்த நர்ஸுக்கு 40 லட்ச ரூபாய் பணமும் 14 லட்சரூபாய் பெறுமானமுள்ள தங்க நகைகள் பார்சலும் அனுப்பியுள்ளதாகவும் அதை விமான நிலையத்தில் டூட்டி கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் .
இரண்டு நாள் கழித்து விமான நிலையத்திலிருந்து பேசுவதாக கூறி அஞ்சலிஷர்மா என்பவர் அந்த நர்ஸிடம் பேசினார் .அப்போது அவர் தங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது அதை பெற்றுக்கொள்ள 30000 ரூபாய் கூரியர் செலவு தரவேண்டுமென கூறி அவரின் வங்கி கணக்கு விவரங்களை பெற்றார் .அவரும் அவர் கேட்ட 30000 கொடுத்தார் .பிறகு மறுநாள் ஜிஎஸ்டி ,வருமான வரி ,சுங்க வரி என்று சொல்லி கிட்டத்தட்ட 17.5 லட்ச ரூபாய் பணத்தை அந்த பார்சலை கொடுக்காமலே வசூல் செய்து விட்டார் .
பிறகு மறுநாள் பேசிய வில்பர்ட் தான் இந்தியாவுக்கு வருவதாகவும் அப்போது தாமே அந்த பார்சலை எடுத்து வந்து உன்னிடம் தருவதாக கூறி மேலும் ஐந்து லட்சம் கேட்டார் .ஆனால் அந்த நர்ஸ் தற்போது தன்னிடம் பணமில்லையென்று கூறிவிட்டார் .அதற்கு பிறகு அந்த லண்டன் டாக்டரிடமிருந்து ஒரு தகவலுமில்லை .இதனால் அதிர்ச்சியடைந்த நர்ஸ், தான் ஏமாற்றப்பட்டதையுணரந்து சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்துள்ளார் .

“பேஸ்புக் நண்பரால் பாஸ்புக் காலி” -நர்ஸின் பர்சிலிருந்த 17 லட்சம் பணால் .